தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 20533
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

சேலம், தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்களிலும், வட தமிழக மாவட்டங்களிலும் 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments