கொரோனாவில் இருந்து எனது உயிரை காப்பாற்றிய பிளாஸ்மா தெரப்பி சிகிச்சை முறையை ஐசிஎம்ஆர் நீக்க கூடாது - டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்

0 1468
கொரோனாவில் இருந்து தனது உயிரை காப்பாற்றிய பிளாஸ்மா தெரப்பி சிகிச்சை முறையை, ஐசிஎம்ஆர் நீக்க கூடாது என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவில் இருந்து தனது உயிரை காப்பாற்றிய பிளாஸ்மா தெரப்பி சிகிச்சை முறையை, ஐசிஎம்ஆர் நீக்க கூடாது என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா சிகிச்சை தொடர்பான தேசிய வழிகாட்டு நெறிமுறையில் இருந்து பிளாஸ்மா தெரபியை நீக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளிவந்த நிலையில், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தான் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிளாஸ்மா தெரப்பி சிகிச்சையால் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது என்று குறிப்பிட்ட சத்யேந்தர் ஜெயின், அதனை நீக்க கூடாது என்று ஐசிஎம்ஆரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments