புற்றுநோயில் இருந்து குணம் பெற்றார் இந்தி நடிகர் சஞ்சய் தத்

0 2351
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், புற்றுநோயில் இருந்து குணம் பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், தனக்கு நுரையீரல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நடிகர் சஞ்சய் தத் தெரிவித்திருந்தார்.

புற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் தான் வென்று விட்டதாக பாலிவுட் நடிகர் சஞ்சயத் தத் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நுரையீரல் புற்று நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சஞ்சய் தத், 2 மாதங்களாக அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த சில வாரங்கள் தனக்கும், குடும்பத்தினருக்கும் கடினமானதாக இருந்தது என்று அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

தன் மீது அன்பு காட்டி ஆதரவாக இருந்த குடும்பத்தினர், ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு சஞ்சய் தத் நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments