தனியார் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

0 1875
தனியார் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

தனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தாமாக முன்வந்து அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

65 சதவீத இடங்களுக்கும் அதிகமான இடங்களை அரசுக்கு ஒதுக்கும்படி, நிர்பந்திப்பதாக கூறி, தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் குற்றச்சாட்டை மறுத்த உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை, தனியார் கல்லூரிகள் தாமாக முன்வந்து ஒப்படைக்கும்பட்சத்தில் அந்த இடங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்களாக பரிசீலிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அரசின் உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தாமாக அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்தும்படி கோர முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments