தமிழகத்தில் ரூ.25,213 கோடி முதலீட்டில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி..!

0 2892
தமிழகத்தில் நிலுவையில் இருந்த 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான 26 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் நிலுவையில் இருந்த 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான 26 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச்சாளர அனுமதிகளுக்கான உயர்மட்டக் குழுவின் மூன்றாவது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதன் மூலம் 25 ஆயிரத்து 213 கோடி ரூபாய் அளவிற்கான தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்து, சுமார் 49 ஆயிரம் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்குவது உறுதியாகி உள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments