சவூதி அரேபியாவில் மத-நிர்வாக அமைப்புகளில் அதிரடி மாற்றங்கள் செய்து மன்னர் சல்மான் உத்தரவு
சவூதி அரேபியாவில் முக்கிய மத, நிர்வாக அமைப்புகளில் மாற்றம் செய்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
அரசுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய அதிகாரம்மிக்க ஷூரா கவுன்சிலில் சபாநாயகரை நியமித்துள்ள மன்னர் இரண்டு துணை துணைசபாநாயகர்களில், பெண் ஒருவரையும் நியமித்துள்ளார்.
அதே போன்று சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக காலித் பின் அப்துல்லா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மன்னர் சல்மானும், பட்டத்து இளவரசர் முகம்மதுவும் சேர்ந்து மதவாரியாக செல்வாக்கு பெற்றவர்களையும், முத்தவல்லின் எனப்படும் மத போலீசின் அதிகாரங்களையும் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
மன்னரின் இந்த நடவடிக்கையால் அவருக்கும், அதிகாரமிக்க மதபண்டிதர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Comments