தமிழ்நாடு முழுவதும் கடைகள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி..!

0 5732
தமிழ்நாடு முழுவதும் கடைகள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி

தமிழ்நாட்டில், நாளை முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளையும், வணிக வளாகங்களையும் திறந்து வைக்க அனுமதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இரவு 9 மணி வரை மட்டும் கடைகள், வணிக வளாகங்களை திறந்து வைக்க தமிழக அரசு அனுமதித்திருந்தது. இந்நிலையில், நாளை முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளையும், வணிகவளாகங்களையும் திறந்து வைக்க அனுமதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு எடுத்த நடவடிக்கையால்தான் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின்குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளதாகவும்,
தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலம், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுப்பது, நோய் தொற்றின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கடைகளை கூடுதல் நேரம் திறக்க அனுமதிப்பதாக கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர்த்த மற்ற பகுதிகளில் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடைகள் மற்றும் பொது இடங்களில் கூட்டம் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும், அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென்றும் பொதுமக்களை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments