தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் - ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை

0 1986
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் - ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் நவம்பர் 3ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என்றும் ஜனவரி 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சத்ய பிரதா சாகுவுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, தேர்தல் ஏற்பாடுகள், காலியாக உள்ள நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments