பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் கைது
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகனை கைது செய்ய, காவல் அதிகாரியை கடத்தி கையெழுத்து பெறப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கராச்சியில் அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றுவிட்டு ஹோட்டல் அறை ஒன்றில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் முகம்மது சப்தார் தங்கியிருந்த நிலையில் அறைக்குள் நுழைந்த பஞ்சாப் போலீசார், அவானை கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கான உத்தரவில், தன்னை கடத்தி துணை ராணுவம் கையெழுத்து பெற்றதாக பஞ்சாப் காவல்துறை தலைவர் புகார் தெரிவித்திருந்தார்.
அவருக்கு ஆதரவாக 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விடுப்பில் செல்வதாக அறிவித்ததையடுத்து, கடத்தல் குறித்த விசாரணைக்கு ராணுவத் தலைவர் கமர் ஜாவேத் பஜ்வா உத்தரவிட்டுள்ளார்.
Comments