பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் மீது காலணிகள் வீச்சு

0 2584
பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் மீது காலணிகள் வீச்சு

பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் மீது பொதுக் கூட்டத்தில் காலணிகள் வீசப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். அவுரங்காபாத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், மேடையில் அமர்ந்திருந்தார்.

அப்போது அவர் மீது சரமாரியாக காலணிகள் வீசப்பட்டன. இதில் ஒரு காலணி, குறி தவறி, பின்னால் சென்று விழுந்த நிலையில், இன்னொரு காலணி அவர் மீது விழுந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments