நெடுஞ்சாலை துறையின் அலட்சியம்… இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

0 10662
நெடுஞ்சாலை துறையின் அலட்சியம்… இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

சென்னை பூந்தமல்லி அருகே புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கை பலகையோ, வேகத்தடை மீது ரிஃப்லெக்டரோ அமைக்கப்படாததால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் சென்னையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். செவ்வாய்கிழமை பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய ஹரீஸ், அரண்வாயல் குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையை கவனிக்கவில்லை.

வேகத்தடையில் ஏறிய போது தவறி கீழே விழுந்து சாலை நடுவே இருந்த செண்டர் மீடியனில் தலை மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலைக்கவசம் அணிந்து சென்ற நிலையிலும் தவறி விழுந்த போது அது கழன்று ஹரிசுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் அங்கு வேகத்தடை புதிதாக அமைக்கப்பட்டதற்கான எச்சரிக்கை பலகையோ, வேகத்தடையில் ரிஃப்லெக்டரையோ நெடுஞ்சாலைத் துறையினர் அமைக்கவில்லை.

வேகத்தடை அமைந்துள்ள அந்த இடத்தின் இரு மார்க்கத்திலும் 10 மீட்டர் தூரத்திற்கு முன்பாக வெள்ளை பெயின்டால் போடப்பட்டுள்ள எச்சரிக்கை கோடு முறையான பராமரிப்பு இன்றி வாகன ஓட்டிகளின் கண்களுக்கு புலப்படாத வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் அந்தப் பகுதியில் கால்நடைகளும் சுற்றித் திரிவதை பார்க்க முடிகிறது.

இதனால் ஒரே நாளில் அரண்வாயல் குப்பம் வேகத்தடை அருகே அடுத்தடுத்து 3 பேர் விபத்தில சிக்கியதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். வேகத்தடை மீது ரிஃப்லக்டர்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

வேகத்தடை மூலம் விபத்து நிகழ்வதை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும் வகையில் 100 மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே எச்சரிக்கைப் பலகை வைக்க வேண்டியது முக்கியம்.

மேலும் சாலையில் 100 மீட்டர் தூரத்திற்கு முன்பே ரிஃப்லக்டர்கள் வைக்கப்பட்டு இருந்தால், எச்சரிக்கைப் பலகையை கவனிக்காமல் இருந்தாலும் வேகத்தடை இருப்பதை அறிந்து செயல்பட ஏதுவாக அமையும்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments