மத்திய அரசின் விருது பெறும் படங்கள் பட்டியலில் 2 தமிழ் படங்கள்

0 5997
மத்திய அரசின் விருது பெறும் படங்கள் பட்டியலில் 2 தமிழ் படங்கள்

பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை பார்த்திபனே தயாரித்து, இயக்கி, அவர் ஒருவரே நடித்திருந்தார். ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது மத்திய அரசின் விருது பெறும் படங்கள் பட்டியலில் ஒத்த செருப்பு திரைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ”ஹவுஸ் ஓனர்” திரைப்படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments