கோயம்பேடு சந்தைக்கு நேற்று இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து வெங்காயம் 80 சதவீதம் விற்பனையாகிவிட்டதாக தகவல்

0 2868
கோயம்பேடு சந்தைக்கு நேற்று இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து வெங்காயம் 80 சதவீதம் விற்பனையாகிவிட்டதாக தகவல்

சென்னை கோயம்பேடு சந்தைக்கு நேற்று இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து வெங்காயத்தில் 80 சதவீதம் விற்பனையாகி விட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து இறக்குமதியான பெரிய வெங்காயம் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் பெரிய வெங்காயம் மொத்த வியாபாரத்தில் கிலோ 85 முதல் 95 ரூபாய் வரையிலும், சில்லரை வியாபாரத்தில் கிலோ 100 முதல் 110 ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில், எகிப்திலிருந்து  27 டன் வெங்காயம் நேற்று இறக்குமதி செய்யப்பட்டது.   அந்த வெங்காயம் மொத்த வியாபாரத்தில் கிலோ 60 ரூபாயாகவும், சில்லரை வியாபாரத்தில்  கிலோ 75 முதல் 80 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments