பத்தாவது முடித்தவுடன்.. “சி.ஏ” படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்..!

0 6886
10-ம் வகுப்பு முடித்த உடனேயே CA எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது.

10-ம் வகுப்பு முடித்த உடனேயே CA எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது.

பட்டயக் கணக்காளர் படிப்பான சி.ஏ படிப்பை ICAI எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் நடத்துகிறது. 12-ம் வகுப்பு முடித்த உடன், சி.ஏ அடிப்படை பாடப்பிரிவுக்கு விண்ணப்பித்து பின் 4 மாதங்கள் பயிற்சி பெற்று தேர்வு எழுதும் நிலையில் ICAI நிறுவனம் புதிய மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது.

10-ம் வகுப்பு முடித்த உடனேயே சி.ஏ அடிப்படை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் போதே சி.ஏ தேர்வுக்கும் பயிற்சி பெற்று பின் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி முடித்த உடன், சி.ஏ அடிப்படை பாடப்பிரிவுக்கான தேர்வை எழுதலாம் என்று ICAI அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு முடித்த உடன் சி.ஏ அடிப்படை பாடப்பிரிவில் சேர பதிவு செய்தாலும், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் பதிவு செல்லும் என்றும் ICAI அறிவித்துள்ளது.

சி.ஏ அடிப்படை பாடப்பிரிவு தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கும் விதமாகவும், தேர்வுக்கு தயாராகும் காலத்தை அதிகப்படுத்தும் விதமாகவும், கால விரயத்தை தவிர்க்கும் விதமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக ICAI தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான சி.ஏ அடிப்படை பாடப்பிரிவு தேர்வு கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டு, வரும் டிசம்பரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments