இனி TET சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்.. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு..!

0 5949

இனி தேர்வு எழுதுபவர்களுக்கான டெட் (TET) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE ) அறிவித்துள்ளது.

தேசிய ஆசிரியர் கல்விக் குழும பொதுக்குழு அதிகாரிகளின் (General body of NCTE) கூட்டம், டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்ற விதியில் திருத்தம் செய்து, ஒருமுறை தேர்ச்சி பெற்றால், அதற்கான சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்க வகையில் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் டெட் தேர்வை எழுதுவோருக்கு மட்டுமே ஆயுள் சான்றிதழ் என்றும், ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றோருக்கு, ஆயுள் வரை சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி, பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 80,000 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் நீட்டிப்பு கோரி போராடி வரும்நிலையில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments