இங்கிலாந்தில் லட்சக்கணக்கில் கரை ஒதுங்கி உயிரிழந்த மீன்கள்
இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் மீன்கள் கரை ஒதுங்கி இறந்தன.
நார்த் வேல்ஸ் பகுதியில் உள்ள பெனார் கடல் பகுதியில் திடீரென ஏராளமான மீன்கள் கரை ஒதுங்கின. பல கிலோ மீட்டர் நீளத்திற்கு லட்சக்கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் அடுத்த சில நிமிடங்களில் துடிதுடித்து இறந்தன.
சீல் மற்றும் டால்பின்கள் இரைக்காக விரட்டியதால் இந்த மீன்கள் தப்பிக்க கரைப்பகுதிக்கு வந்திருக்கலாம் எனவும், அப்போது அவை இறந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments