புகழ்மிக்க பாங்கே பிஹாரி கோவிலைத் திறக்கக் கோரி திரண்ட பக்தர்கள்

0 1221

மதுரா நகரின் புகழ் பெற்ற கண்ணன் கோவில் பன்கே பிகாரியைத் திறக்கக் கோரி பக்தர்கள் கோவில் வாசலில் திரண்டு தீபம் தானம் செய்யத் தொடங்கியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

பிருந்தாவனத்தில் அமைந்துள்ள பன்கே பிகாரி (Bankey Bihari)கோவில் எப்போதும் பக்தர்கள் அலைமோதும் புண்ணியத் தலமாக கருதப்படுகிறது. கடந்த ஏழு மாதங்களாக கொரோனாவால் கோவில் அடைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி, தசரா ,தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படும் வேளையில் கோவிலைத் திறக்கக் கோரி பக்தர்கள் நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவிலின் அடைபட்ட கதவுகளுக்கு வெளியே ஆயிரக்கணக்கான பக்தர்கள் விளக்கேற்றி வைத்து பஜனைகள் பாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments