அசாம் மாநிலத்தில் காசிரங்கா தேசியப்பூங்கா இன்று முதல் மீண்டும் திறப்பு
அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த தேசியப்பூங்காக்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
அங்குள்ள பிரபலமான காசிரங்கா தேசியப்பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தை முதல்வர் சர்பானந்தா சோனோவால் முறைப்படி இன்று திறந்து வைக்கிறார். அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
பூங்கா மீண்டும் திறக்கப்பட்ட முதல் சில நாட்களில் யானை சஃபாரிகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்றும் நவம்பர் முதல் மீண்டும் தொடங்கலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
TOMORROW!
— Kaziranga National Park & Tiger Reserve (@kaziranga_) October 20, 2020
Let’s promote a culture of #responsibletourism. We @kaziranga_ cordially invite everyone for the park opeming ceremony?#welcometokaziranga @sarbanandsonwal @CMOfficeAssam @ParimalSuklaba1 @ntca_india pic.twitter.com/vIpZ2Vx8x5
Comments