மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் : எதிர்கட்சிகளின் ஆதரவுடன் பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

0 846
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் : எதிர்கட்சிகளின் ஆதரவுடன் பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம், எதிர்கட்சிகளின் ஆதரவுடன் பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், இந்த தீர்மானத்தை முதலமைச்சர் அமரீந்தர் சிங் தாக்கல் செய்தார். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 3 புதிய மசோதாக்களையும் அவர் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், விவசாயம் என்பது மாநில அதிகாரத்தின் கீழ் வரும் நிலையில், மத்திய அரசு அதை உதாசீனப்படுத்தி உள்ளது என்றார். தொடர்ந்து, விவாதம் முடிந்ததும், விவசாய மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments