காங்கோவில் சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்திய கும்பல்: தப்பிச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள்
காங்கோவில் ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தப்பிச் சென்றனர்.
பெனி என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் நேற்று அதிகாலை ஆயுதமேந்திய 100 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து சிறையில் இருந்த ஆயிரத்து 300க்கும் அதிகமான கைதிகளை அந்தக் கும்பல் மீட்டுச் சென்றது.
இவர்களில் 20 கைதிகள் மீண்டும் சிறைக்கே வந்துவிட்ட நிலையில் தப்பியோடிய கும்பலையும், கைதிகளையும் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
Comments