இந்தியாவில் சைபர் க்ரைம் குற்றங்களால் 2019ல் மட்டும் ரூ.1.25 லட்சம் கோடி இழப்பு
இந்தியாவில் சைபர் க்ரைம் குற்றங்களால் கடந்த 2019ல் மட்டும், ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக, தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் பந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி, 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வருவதன் மூலம் சைபர் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார். சைபர் பாதுகாப்பு தயாரிப்புகளில் ஒரு சில இந்திய நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளதால், இத்துறையில் பெரிய வெற்றிடம் உள்ளது என்றும் பந்த் குறிப்பிட்டுள்ளார்.
Comments