மும்பையின் மின்சார ரயில்களில் இன்று முதல் பெண்களுக்கும் அனுமதி
மும்பையின் மின்சார ரயில்களில் இன்று முதல் பெண்கள் பயணிக்கலாம் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மும்பையில் மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே, மற்றும் ஹார்பர் லைன் என மூன்று வழித்தடங்களில் 700 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அரசு ஊழியர்கள், மருத்துவத் துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவை புரிவோர் மட்டும் மின் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் மின்சார ரயில்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாக பியூஷ் கோயல் டிவிட்டர் பதிவு ஒன்றில் அறிவித்துள்ளார்.
Comments