ஐபிஎல் தொடர்: டெல்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

0 2479
ஐபிஎல் தொடர்: டெல்லி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று களமிறங்கிய டெல்லி அணியில் அதிரடியாக ஆடிய தவான், நடப்பு தொடரில் இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்து 106 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை சேர்த்தது.

இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில், தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

அதிரடியாக ஆடிய பூரன் அதிகபட்சமாக 53 ரன்களை சேர்த்தார். பொறுப்புடன் ஆடி மேக்ஸ்வெல் 32 ரன்களை சேர்க்க, 19 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments