ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணை திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஆந்திர மாநில அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து இரவு 9 மணியளவில் 300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அந்த நீர் நள்ளிரவில் பள்ளிப்பட்டு பாலத்தைக் கடந்து காலை அருங்குளம் அணை வரை வரும் என எதிர்பார்க்கப்படுவதால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments