நீட் நுழைவுத் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேர்வு முடிவுகள் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்களின் தேர்வை ரத்து செய்வது மற்றும் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என தேசிய தேர்வு முகமை எச்சரித்துள்ளது.
எனினும் உண்மையான குறைகள் இருந்தால் அதற்கு தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மாற்றித் தருவதாக தவறான உறுதி அளிக்கும் ஆட்களை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.
Comments