பொறியியல் படிப்பில் சேர்வதற்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவு

0 1657
பொறியியல் படிப்பில் சேர்வதற்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவு

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், இதுவரை 21,422 இடங்களே நிரம்பி உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

3-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 35 ஆயிரத்து133 பேருக்கும், 4-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 40 ஆயிரத்து 573 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய உடன், ஏராளமானோர் போட்டி போட்டு விண்ணப்பித்ததாகவும், ஆனால் கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான இடங்கள் நடப்பு கல்வியாண்டிலும் காலியாகவே இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments