நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு ஆபாசமாக டுவிட்டரில் மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு

0 7230
நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு ஆபாசமாக மிரட்டல் விடுத்த நபர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு ஆபாசமாக மிரட்டல் விடுத்த நபர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்தால், அவரது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கிவிடுவேன் என ஆபாசமாக ரித்திக் என்ற பெயரில் டுவிட்டரில் பதிவிடப்பட்டிருந்தது.

இவ்வாறு மிரட்டல் விடுத்த நபர் குறித்து ஐ.பி. முகவரியை கொண்டு சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவதூறாக பேசி கலகம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments