போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆர்மீனியா பீரங்கி தாக்குதல் நடத்துவதாக அஜர்பைஜான் குற்றச்சாட்டு

0 1443
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆர்மீனியா பீரங்கி தாக்குதல் நடத்துவதாக அஜர்பைஜான் குற்றச்சாட்டு

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட நிலையிலும் ஆர்மீனியா பீரங்கி தாக்குதலில் ஈடுபட்டதாக அஜர்பைஜான் குற்றஞ்சாட்டி உள்ளது.

நாகோர்னோ-கராபாக் பிராந்தியங்கள் தொடர்பாக, கடந்த மாதம் முதல் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், ரஷ்யா மற்றும் துருக்கி முயற்சியில் 2 வது முறையாக இரு தினங்களுக்கு முன்பு போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த நிலையில், போர் மண்டலங்களை தாண்டி அஜர்பைஜானுக்கு சொந்தமான டெர்ம்டர், அக்தாமின் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்மீனியா ராணுவம் தாக்குதல் நடத்துவதாக அந்நாட்டு அரசு வீடியோ வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments