ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம்-இளம்பெண் குடும்பத்தினரிடம் 2ஆவது முறையாக சிபிஐ விசாரணை
ஹாத்ரசில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த இளம்பெண்ணின், குடும்பத்தினரிடம், இரண்டாவது முறையாக, சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
உத்திரப்பிரதேசத்தில், 19 வயது இளம்பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக, பாதிக்கப்பட்டு உயிரிழந்த இளம்பெண் குடும்பத்தினரை சந்தித்து, விசாரணை நடத்தியது. மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தையும், மீண்டும் பார்வையிட்ட சிபிஐ, துப்புத் துலக்கியது.
Comments