எகிப்திலிருந்து கோயம்பேடு சந்தைக்கு 135 டன் வெங்காயம் இறக்குமதி

0 3690
எகிப்திலிருந்து கோயம்பேடு சந்தைக்கு 135 டன் வெங்காயம் இறக்குமதி

சென்னை கோயம்பேடு சந்தைக்கு எகிப்து நாட்டிலிருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 

மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு 60 லாரிகளில் பெரிய வெங்காயம் வந்த நிலையில், தற்போது 25 முதல் 30 லாரிகளிலேயே கொண்டு வரப்படுவதாகவும்,  கனமழை பெய்வதால் வரத்து குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நேற்று 80 முதல் 90 ரூபாய் வரை விற்பனையான பெரிய வெங்காயம் இன்று 90 முதல் 100 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், இதேபோல் நேற்று 90 ரூபாயாக இருந்த சின்ன வெங்காயம் விலை இன்று 110 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் எகிப்திலிருந்து குளிரூட்டப்பட்ட 25 கண்டெய்னர்களில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை கிலோவுக்கு 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்ய இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments