நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் 3 மசோதாக்கள் தாக்கல்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம், பஞ்சாப் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், இந்த தீர்மானத்தை முதலமைச்சர் அமரீந்தர் சிங் தாக்கல் செய்தார். மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து 3 மசோதாக்களையும் அவர் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், விவசாயம் என்பது மாநில அதிகாரத்தின் கீழ் வரும் நிலையில், மத்திய அரசு அதை உதாசீனப்படுத்தி உள்ளது என்றார்.
இந்த 3 சட்டங்கள் மட்டுமின்றி, மத்திய அரசு கொண்டுவரவுள்ள மின்சார திருத்த சட்டமும், விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்கள் ஆகியோருக்கும், வேளாண் சந்தைப்படுத்துதல் முறைக்கும் எதிரானது என அமரீந்தர் சிங் குற்றம் சாட்டினார்.
Comments