போயஸ் கார்டன் இல்லத்திற்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளுமாறு தீபக், தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்

0 5215
போயஸ் கார்டன் இல்லத்திற்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளுமாறு தீபக், தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்

அரசுடமையாக்கப்பட்ட வேதா இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பங்கிடும் விவகாரத்தில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு 68 கோடி ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36.9 கோடியை தொகையை விடுவிக்க கோரி வருமானவரி துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த சிவில் நீதிமன்றம் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் மற்றும் தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் சிறப்பு அதிகாரிக்கு வரும் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments