ஒலிம்பிக் போட்டிக்கான தேசிய பயிற்சி முகாமிலிருந்து பி.வி சிந்து விலகல்.. லண்டனுக்கு திடீர் பயணம்
ஒலிம்பிக் போட்டிக்கான தேசிய பயிற்சி முகாமிலிருந்து வெளியேறி லண்டனுக்கு இந்தியாவின் முன்னனி பேட்மின்டன் வீராங்கனையான பி.வி. சிந்து சென்றிருப்பது விளையாட்டு உலகினரை ஆச்சரியமடைய செய்துள்ளது.
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தருவார் என பெரிதும் எதிர்பார்க்கபடுவோரில் ஒருவரான சிந்து, முகாமிலிருந்து வெளியேறியதற்கான காரணம் உறுதியாக தெரியாத நிலையில், குடும்ப பிரச்னை பின்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐதராபாத்திலிருந்து லண்டன் புறப்படும் முன்பு கோபிசந்த்தின் பயிற்சி மைய பயிற்சியாளர்களை தொடர்பு கொண்டு 8 முதல் 10 வாரங்களுக்கு இந்தியா திரும்பி வர மாட்டேன் என சிந்து கூறியுள்ளார். லண்டனில் பிரிட்டன் வீராங்கனைகளுடன் அவர் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
Comments