மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மத்திய வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 9 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மத்திய மேற்கு மற்றும் கிழக்கு வங்க கடலில் அவ்வப்போது, மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு அங்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments