முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சியினர், திரையுலகினர் நேரில் சந்தித்து ஆறுதல்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு அரசியல் கட்சியினர், திரையுலகினர் ஆறுதல் தெரிவித்தனர்.
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு நேரில் சென்று அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதேபோல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஸ் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.
இதேபோல் பாஜக பிரமுகர்கள் எஸ்.வி.சேகர், குஷ்பூ, நடிகர்கள் பிரபு, ஜீவா , நடிகை ரோஜா உள்ளிட்டோரும் நேரில் சென்று முதலமைச்சருக்கு தங்களது ஆறுதலை தெரிவித்து கொண்டனர்.
இயக்குநர் டி.ராஜேந்தரும் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 8 மாதமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், உள்ளாட்சி துறை வரியை நீக்கி தரும்படி ஏற்கெனவே அனுப்பிய கடிதத்தை நினைவுபடுத்தியதாக தெரிவித்தார்.
Comments