கொட்டித் தீர்க்கும் கனமழை... வெள்ளத்தில் மிதக்கும் வடகர்நாடகா!

0 8612

ட கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒரு வாரத்துக்கும் மேலாகக் கனமழை கொட்டி வருவதால், வட கர்நாடகா மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கித் தத்தளித்து வருகின்றன...

வட கர்நாடகா மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கும் மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கலபுரகி, யாதகிரி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், மராட்டிய மாநிலத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக, அங்குள்ள அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால், கடந்த 14- ம் தேதி முதல் பீமா ஆற்றில் அதிகளவில் தண்ணீர் ஓடுகின்றன. இதனால், ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர் மழை காரணமாக கலபுரகி, யாதகிரி, விஜயாப்புரா, ராய்ச்சூர் ஆகிய 4 மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கு, ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மைய அதிகாரி, “மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து இதுவரை 36,290 பேர் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 174 நிவாரண முகாம்களைத் திறந்துள்ளோம். அங்கு 28 ஆயிரத்து 7 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை, ராணுவம் மற்றும் இயற்கை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு வருகிறார்கள்.

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments