காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை... மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 15ஆயிரம் கன அடி வீதமாக இருந்த நீர்வரத்து இன்று காலை 16ஆயிரம் கன அடி வீதமாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டுகிறது.
இதேபோன்று, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்றைவிட வினாடிக்கு 2479 கன அடி வீதம் அதிகரித்து, 17,004 கன அடியாக உள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவை விட, வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மொத்தமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மற்றும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 14,900கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Comments