திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5 ஆம் நாளான இன்று மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.
ஜீயர்கள் திவ்ய பிரபந்தம் பாட, அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க மோகினி அவதாரத்தில் கிருஷ்ணர் சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள கருட சேவை நிகழ்ச்சிக்காக, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொண்டு வரப்பட்ட சுமார் 4 டன் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவத்தின் 4 ஆம் நாளான நேற்று, 17 ஆயிரத்து 330 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை செலுத்தி உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Comments