சென்னையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற பெண் நீதிபதியின் வீட்டில் அத்துமீறி நுழைய முயற்சி
சென்னை திருவான்மியூரில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கலாக்ஷேத்ரா காலனி பார்வதி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபோதையில் வந்த மர்ம நபர்கள் 5பேரில் ஒருவர் தான் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும், அங்குள்ள (கதவு எண் 1N என்ற) தன்னுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறி அத்துமீறி நுழைய முயன்றதாக குடியிருப்பின் காவலாளி தேவராஜன் கொடுத்த புகாரில் திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
குறிப்பிட்ட வீடு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதியின் வீடு என்பதும் அவரது மகள் குடும்பத்துடன் வசித்து வருவதாக அறிந்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சியைக் கொண்டு மர்ம நபர்களை விசாரித்து வருவதோடு, குடியிருப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments