கும்பகோணத்தில் இரட்டைக்கொலை.. 4 பேர் கைது

0 8833
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சொத்துதகராறு காரணமாக வழக்கறிஞரையும், அவரது நண்பரையும் வெட்டி படுகொலை செய்ததாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சொத்துதகராறு காரணமாக வழக்கறிஞரையும், அவரது நண்பரையும் வெட்டி படுகொலை செய்ததாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கும்பகோணம் கிளாரட் நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் காமராஜ். இவர் உடல்நலமில்லாத தனது தந்தையுடன் மருத்துவமனையிலிருந்து நேற்று மாலை இருசக்கரவாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வழிமறித்த மர்ம நபர்கள், திடீரென காமராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை பார்த்திபன் காயமின்றி உயிர் தப்பினார்.

இதனிடையே, இதே கும்பலைச் சேர்ந்த சிலர், காமராஜின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது நண்பர் சக்திவேலை வெட்டியதாக சொல்லப்படும் நிலையில், சம்பவ இடத்திலேயே சக்திவேலும் உயிரிழந்தார். இதையடுத்து, கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி வழக்கறிஞர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காமராஜுக்கும் உறவினர் ராஜவேலுக்கும் இடையே 15ஆண்டுகளாகத் தொடரும் சொத்து பிரச்னை இருந்துவருவதாகக் கூறப்படுவதால் இதன் காரணமாகக் கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் நாச்சியார் கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இரட்டை கொலை தொடர்பாக ஆனந்த், கண்ணன், சசிகுமார், சம்பத் ஆகிய 4 பேர்களை கைது போலீசார் கைது செய்துள்ளனர். கொலையில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இரட்டை கொலை குறித்து நேரில் ஆய்வு செய்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராமன், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இரட்டை கொலை தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments