மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து அமித்ஷா கவலை
சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்காக ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்க முடியாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியின் போது, காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட போது, தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்படாவிட்டால் அங்கு ரத்த ஆறு ஓடியிருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து கவலை தெரிவித்த அவர், நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாகவும் மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Comments