இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் டெபாசிட் செய்த சுமார் 7,000 கிலோ தங்கத்தை திரும்பப் பெற்று பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு

0 28051
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் டெபாசிட் செய்த சுமார் 7,000 கிலோ தங்கத்தை திரும்பப் பெற்று பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில்  டெபாசிட் செய்த சுமார் 7,000 கிலோ தங்கத்தை திரும்பப் பெற்று பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. 

2015ஆம் ஆண்டில்  இரண்டரை சதவிகித வட்டியோடு கூடிய தங்க முதலீட்டு திட்டம் நடைமுறைக்கு வந்ததையடுத்து பாரத ஸ்டேட் வங்கியில் 7,800 கிலோ தங்கத்தையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் சுமார் 7 ஆயிரம் கிலோ தங்கத்தையும் குறுகிய கால முதலீடாகவும், வட்டி வருவாயை தங்கமாகவே கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும் தேவஸ்தானம் டெபாசிட் செய்துள்ளது.

இந்த முதலீட்டால் லாபமில்லை என கூறி, அதை திரும்ப பெறும்படி பாரத ஸ்டேட் வங்கி தவிர்த்த வங்கிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து  6 மாத காலத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் நீண்டகால முதலீடு அடிப்படையில் டெபாசிட் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments