மேலும் ஒரு நிதி தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வாய்ப்பு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

0 4587
மேலும் ஒரு நிதி தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வாய்ப்பு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில், மேலும் ஒரு நிதி தொகுப்பு திட்டத்தை அறிவிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 15 வது நிதி குழுவின் தலைவர் என்.கே.சிங் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்திருப்பதற்கான காரணம் குறித்த ஆய்வை தொடங்கி இருப்பதாக கூறினார்.

அதில் சில தரவுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், அதன் அடிப்படையில் நாடாளுமன்றத்திலோ, பொதுமக்களிடமோ உரிய அறிவிப்புகள் வெளியிடப்டும் என்று தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments