ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு காவல் நன்னடத்தை சான்று அவசியம்: சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

0 1252
ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு காவல் நன்னடத்தை சான்று அவசியம்: சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

ஸ்விகி, ஜொமாட்டோ, டன்சோ மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், புதிதாக டெலவரி ஊழியர்களை பணியமர்த்தும் போது காவல் நன்னடத்தை சான்று பெறுவது அவசியம் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார்.

ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் சிலர், இருசக்கர வாகன திருட்டு, வழிப்பறி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக நரியங்காடு காவலர் குடியிருப்பில் சிறுவர் பூங்காவை தொடங்கி வைத்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், காவலர் குடும்பத்தினர் வாரிசுகளுக்கு கல்லூரி சீட் பெற்று தந்தது போல், நவம்பரில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments