ஐதராபாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.10,000: முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

0 1461
ஐதராபாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.10,000: முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

ஐதராபாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  ஏழை குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்கப்படுமென முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

அண்மையில்  பெய்த கனமழையில் அந்த நகரின் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் ஏராளமான வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. 

இந்நிலையில் ஐதராபாத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாகவும், முழுவதும் சேதமடைந்த வீட்டுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், பகுதியளவு சேதமடைந்த வீட்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும்  வழங்கப்படுமென சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments