கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் கம்பிவட இணையதள சேவை இணைப்பை எடுத்தனர்: டிராய் தகவல்
இந்தியாவில் கம்பிவட இணையதள இணைப்பு சேவை போதிய அளவிற்கு மக்களால் பயன்படுத்தப்படாத நிலையில், மீண்டும் முயற்சிகள் எடுக்கப்பட்டால், அதிக அளவில் வாடிக்கையாளர்கள் சேர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உரிய வருவாய் கிடைக்கும் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் கம்பிவட இணையதள சேவை இணைப்பை எடுத்தனர். இது கடந்த 4 ஆண்டுகளில் வழங்கப்பட்ட இணைப்புகளை விட அதிகம் என டிராய் தெரிவித்துள்ளது.
இவர்களையும் சேர்த்து நாட்டில் சுமார் இரண்டு கோடி பேர் கம்பிவட இணையதள சேவையை பயன்படுத்துகின்றனர்.
இந்த சேவையை வழங்கும் நிறுவனங்களை பொறுத்தவரை ஜியோ புதிதாக 12 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனத்திடம் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த இரண்டு நிறுவனங்களும் குறைந்த மாத கட்டணத்தில் அன்லிமிட்டட் சேவைகளை வழங்குகின்றன
Comments