மூக்கு வழியாக தெளிக்கும் தடுப்பு மருந்து

0 3820
மூக்கு வழியாக தெளிக்கும் தடுப்பு மருந்து

கொரோனாவை தடுக்க புதிய தடுப்பூசி பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால்  மூக்கு வழியாக தெளிக்கப்படும் தடுப்பு மருந்து பரிசோதனை விரைவில் நடைபெற உள்ளது.

கொரோனாவை தடுக்க பல்வேறு தடுப்பூசி பரிசோதனைகள் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் தடுப்பூசிகளின் பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் ஆகியவை மூக்கு வழியே தெளிக்கும் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட உள்ளன என்றார்.

தேவையான நடைமுறை ஒப்புதல் கிடைத்த பின்னர்  இந்த பரிசோதனை தொடங்குமென அவர் குறிப்பிட்டார். 

இதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் வாஷிங்டன் பல்கலை கழகத்தின் மருத்துவ கல்லூரியோடு ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் கூறினார்.

இதன்படி அந்த நிறுவனம் சார்ஸ் கோ விட் தடுப்பு மருந்து பரிசோதனை, தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றை மேற்கொள்ளும் என்றும், சீரம் இந்தியா நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் விரைவில் இறுதி கட்ட பரிசோதனையில் ஈடுபட உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பரிசோதனையில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் இப்போது உடலில் செலுத்தும் ஊசி வகையிலான தடுப்பூசி பரிசோதனைகள்  வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மூக்கு வழியே தெளிக்கும் தடுப்பு மருந்து உருவாக்கும் பணியும் வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments