சேலத்தில் பெண் துணை ஆட்சியரை தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்த வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சேலத்தில் பெண் துணை ஆட்சியரை தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்த வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் துணை ஆட்சியராக பணிபுரியும் சாந்தி, கணக்கு வழக்கு சமர்ப்பிக்காததால் ஊழியர் இலக்கியாவை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க செயலாளராக இருந்து வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் அர்த்தனாரி துணை ஆட்சியர் சாந்தியை செல்போனில் தொடர்புகொண்டு தரக்குறைவாக, மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இதனிடையே, துணை ஆட்சியர் சாந்தி ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், ஆடியோவில் அவர் பேசியதை எடிட் செய்துவிட்டு, தாம் பேசியதை மட்டும் வெளியிட்டுள்ளதாகவும் வருவாய் ஆய்வாளர் அர்த்தனாரி குற்றம்சாட்டியுள்ளார்.
Comments