அமெரிக்க வாழ் இந்திய சிறுமியின் கொரோனா சிகிச்சைக்கான புதிய கண்டுபிடிப்பிற்கு 25 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு
கொரோனா சிகிச்சை தொடர்பான புதிய கண்டுபிடிப்பிற்காக 14 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுமி, 25 ஆயிரம் அமெரிக்க டாலரை பரிசாக பெற்றுள்ளார்.
டெக்சாஸைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் அனிகா செப்ரோலு, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான புதிய சிகிச்சை முறையை கண்டறிந்து இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
கொரோனா வைரஸின் ஒரு குறிப்பிட்ட புரதத்துடன் பிணைக்கக்கூடிய மூலக்கூறை உருவாக்கி உள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா வைரஸின் புரத செயல்பாட்டை நிறுத்தி பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் சிறுமி அனிகா செப்ரோலு தெரிவித்துள்ளார்.
Comments