முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல்

0 9432
எனது வாழ்வை தழுவி எடுக்கும் 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் - முரளிதரன் வேண்டுகோள்

விஜய் சேதுபதி 800 திரைப்படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அறிக்கையை பகிர்ந்து, நன்றி வணக்கம் என விஜய் சேதுபதி பதிவிட்டுள்ள நிலையில், 800 படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் சர்ச்சைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தன் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு கடுமையான அழுத்தம் தரப்படுவதாகக் கூறியுள்ள அவர், தன்னால் தமிழ்நாட்டின் தலைசிறந்த ஒரு கலைஞன் பாதிப்படைவதை விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, 800 திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதியை முத்தையா முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த அறிக்கையை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என்று மட்டும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் முரளிதரன் வேண்டுகோளை விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டதாகவும், 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments